தமிழக செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்துக் குறைவு காரணமாக விலை சற்று அதிகரித்து உள்ளது.

சென்னை,

விலை சற்று உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை வெயிலின் தாக்கம் மற் றும் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் என்னவென்றால் கர்நாடகா, ஆந்திரா மாநி லங்களில் உற்பத்தி குறைந்துள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தற்போது காய்கறி விளைச் சல் குறைந்துள்ளதால், அவர்களும் தங்களுக்கு தேவையான காய்கறி களை வாங்குவதற்காக ஆந்திரா, கர்நாடகாவை நாடுகின்றனர். இதனால் ஏற்படும் போட்டி காரணமாகவும் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து உள்ளது.

தக்காளி கிலோ ரூ.40

அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி விலை (கிலோவுக்கு) வருமாறு:-

வெங்காயம் ரூ.18 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுத் தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரையும், நவீன் தக்காளி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.13 முதல் ரூ.18 வரை யும், சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரையும் விற்பனை செய்யப் படுகிறது. கேரட் ரூ.30 முதல் ரூ.50 வரையும், பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.80 வரையும், பீட்ரூட் ரூ.20 முதல் ரூ.25 வரையும் விற்பனை செய்யப்படு கிறது.

இதேபோன்று, வெண்டைக்காய் ரூ.35 முதல் ரூ.40 வரையும், கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரையும், பாகற்காய் மற்றும் புடலங்காய் ரூ.20 முதல் ரூ.25 வரையும், வெள்ளரிக்காய் ரூ.22 முதல் ரூ.25 வரையும், பச்சை மிள காய் ரூ.25 முதல் ரூ.30 வரையும், இஞ்சி ரூ.50 முதல் ரூ.65 வரையும், பூண்டு ரூ.100 முதல் ரூ.160 வரையும் விற்பனை செய்யப்பட்டது. சில்லரை கடைகளில் தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.