தமிழக செய்திகள்

நீலகிரி: சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் படுகாயம்

மைசூரு, ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு வேனில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அக்கயபலிம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் மைசூரு, ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு வேனில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஊட்டிக்கு சுற்றுப்பயணம்

மைசூரு பயணத்தை நிறைவு செய்துவிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். குன்னூர் அருகே நந்தகோபால் பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.