தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி,

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்து

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளூந்தூர்பேட்டையில் நேற்று இரவு 3 ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அரசு ஆய்வு மாளிகை அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரம் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

SCROLL FOR NEXT