தமிழக செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழா: சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம்,

வேளாங்கண்ணியில் நடைபெறும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த சிறப்பு ரெயில் (07365) வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் 7-ந்தேதி மாலை 4.00 மணிக்கு சேலம் வந்த டையும். பின்னர், இங்கிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி வழியாக 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (07366) வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 1.00 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் 10-ந்தேதி காலை 7.20 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 10-ந் தேதி அதிகாலை 3.00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.