தமிழக செய்திகள்

வேலூர்: கைதிகளுடன் பழக்கம்... 3 ஜெயில் காவலர்கள் அதிரடி இடமாற்றம்

இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர்.

வேலூர்,

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் அமைந்துள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைதி

இந்தநிலையில் ஜெயிலில் உள்ள கைதிகளுடன் சில ஜெயில் காவலர்கள் பழகி வந்ததும், தகவல் பரிமாற்றத்துக்கு உதவியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் ஜெயில் காவலர்கள் சிலர் குற்றவாளிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

கைதிகளுடன் பழகியதாக வேலூரில் பணியாற்றி வந்த சதீஷ்குமார் திருச்சிக்கும், சந்திரசேகர் கோவைக்கும், பிரசாந்த் ஊட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT