தமிழக செய்திகள்

வேலூரில் பரபரப்பு; காதல் மனைவி மீது ஏற்பட்ட கோபம் - கார் டிரைவர் செய்த வெறிச்செயல்

பட்டப்பகலில் காதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் சத்துவாச்சாரி பகுதிமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

ராணிப்பேட்டை மாவட் டம் அரைப்பாக்கத்தை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 30). இவரது கணவர் சத்துவாச்சாரி பேஸ்- 1 சவுத் அவென்யூ சாலையை சேர்ந்த ஹரி பிர சாத். கார் டிரைவராக உள்ளார். இருவரும் காதலித்து 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் கீர்த்திகா அரைப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டில் சென்று தங்கி இருந்தார்.

சத்துவாச்சாரி பேஸ்-2, ஆர். டி.ஒ. சாலை 12-வது தெரு வில் உள்ள ஒரு மேட்ரிமோனியில் வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்தால் மகளை, மருமகன் ஏதாவது செய்து விடுவார் என பயந்து தான் வேலை செய்யும் இடத் திற்கு மகளை அழைத்துச் சென்றார். ஹரிபிரசாத் இன்று காலை 10 மணிக்கு தனது மனைவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் என்று கேட்டார் தனது தாய் வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஹரிபிரசாத் பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு விஜயா வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு மனைவியை சரமாரியாக வெட்டினார்.

இதில் கீர்த்திகாவுக்கு 2கை மணிக்கட்டுகளும் துண்டாகியது. கழுத்து மற்றும் வாய்ப்பகுதியில் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் தடுக்க முயன்றபோது அவரையும் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஹரி பிரசாத் பட்டாக் கத்தியுடன் சர்வ சாதாரணமாக பைக்கில் ஏறி சத்துவாச்சாரி போலீசில் சரணடைந்தார்.

தகவல் அறிந்த வேலூர் வடக்குபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் காதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் சத்துவாச்சாரி பகுதிமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT