வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ‘சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2026’ நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து வேலூர் வடக்கு மண்டலத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை எல்.முருகன் கேட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்.முருகனிடம், வேலூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “வேலூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவு பெறப் போகின்றன. இது குறித்து விமானத்துறை மந்திரியிடம் பேசியிருக்கிறேன். மீதமுள்ள பணிகள் முடிந்ததும், வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.