தமிழக செய்திகள்

வேலூர்: ரூ.6.5 கோடி மதிப்பிலான ரெயில்வே பொருட்கள் திருட்டு - 5 பேர் கைது

ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த, ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான செம்பு மற்றும் இரும்புப் பொருட்கள் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன.

5 பேர் கைது

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பிராங்கிளின் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

விசாரணை

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட ரெயில்வே பொருட்களை பழைய இரும்புக் கடையில் உடைத்தும், உருக்கியும் சிறிது சிறிதாக விற்பனை செய்தும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT