தமிழக செய்திகள்

வேலூர்: தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சோகம்

மேற்கூரை சரிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்,

வேலூரில் தேவாலய கட்டுமானத்தின்போது மேல்தளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியருகே தேவாலயம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கட்டுமானத்தின் முதல் தளம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் சிக்கி கொண்டனர்.இந்த தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரில் 8 பேர் காயங்களுடன் மீட்டநிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 6-க்கும் மேற்பட்ட கட்டடத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், காட்பாடி எம்.எல்.ஏ. சுதாகர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்துள்ளது என தெரிய வந்துள்ளது. எனினும், கட்டிடம் இடிந்ததற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT