தமிழக செய்திகள்

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வாலின் பணிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவு பெற்றது.

சென்னை,

தீயணைப்புத்துறை டிஜிபியாக வெங்கடரமணனை நியமித்து தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தீயணைப்புத்துறை டிஜிபி சீமா அகர்வாலின் பணிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) நிறைவு பெற்றது. இதையடுத்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில், ஜூன் 27 ஆம் தேதி காவல் துறை சார்பில், பிரிவு உபசார விழா நடந்தது. இதில், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தீயணைப்புத்துறை டிஜிபி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் ஓய்வு பெற்ற நிலையில், இந்தத் துறைக்கு புதிய டிஜிபியாக வெங்கடரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்துள்ளார்.

வெங்கடராமன், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, டிஜிபி சங்கர் ஜிவாலுக்குப் பதிலாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் இருந்த, சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தேர்தலுக்குப் பின்னர் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.