தமிழக செய்திகள்

கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

கோவை சூலூர் அருகே கடந்த மே மாதம் 21-ந்தேத 10 வயது சிறுமி, வீட்டு முன்பு விளையாடி கொண்டு இருந்தாள். இந்தநிலையில் சிறுமி மாயமானார். அந் சிறுமியை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை கண்ணம்பாளையம் குளம் அருகே தென்னந்தோப்பில் வீசியிருந்தனர்.

இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்தி(வயது 33), அவருடைய நண்பர் மோகன் (31) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 21 நாளில் 819 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலை வழக்கில் இன்று (திங்கட்கிழமை) போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஹரிகரன் தீர்ப்பு அளிக்கிறார்.

SCROLL FOR NEXT