தமிழக செய்திகள்

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கேட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை,

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கேட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளிக்கிறது.

பொதுநல மனு

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பை, பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் நெல்லையைச் சேர்ந்த வக்கீல் கே.வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இடைக்கால உத்தரவு

அதில், இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. ஜி.அருள்முருகன் ஆகியோர், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதித்து கடந்த ஜூலை 10-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இன்று தீர்ப்பு

இந்த தடையை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த அக்டோபர் 1-ந்தேதி உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பிறப்பிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT