பசும்பொன்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஆண் டுதோறும் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா, குரு பூஜை விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழா வாக தொடங்கியது. நேற்று முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் விழாவாக நடந்தது.
இந்த நிலையில், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் மரியாதை செலுத்தினார்.
விழாவை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றார். அதைத்தொடர்ந்து மதுரை வரும் அவர் மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதை தொடர்ந்து 5 மணிக்கு மேல் விமான நிலையம் சென்று டெல்லி புறப்படுகிறார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை மாவட்டம் முழு வதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டு உள்ளார்.