தமிழக செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் வருகையையொட்டி கோவை, நீலகிரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை,

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.

'உபாசி' நூற்றாண்டு மாநாடு

தென்னிந்தியாவின் தேயிலை தொழிலுக்கு சேவையாற்றி வரும் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாடு நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

துணை ஜனாதிபதி தமிழகம் வருகை

குன்னூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார்.

கோவை வரும் அவரை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். பின்னர், கோவையில் இருந்து சாலை வழியாக குன்னூர் செல்கிறார்.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் வருகையையொட்டி கோவை, நீலகிரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை

1926-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு சிறிய தேயிலை சோதனை நிலையமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் கீழ், தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகப் பாடுபடும் சர்வதேச அளவிலான முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT