தமிழக செய்திகள்

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி: பெற்றோரை சந்தித்து ஆசி பெற்ற விஜய்

சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோர் சந்திரசேகர் - ஷோபா வீட்டிற்கு சென்ற விஜய் , அவர்களிடம் ஆசி பெற்றார்.

சென்னை,

தமிழக சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 108 இடங்களில் முன்னிலை மற்றூம் வெற்றி வக்கிறது. , திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 தொகுதிகளை வசப்படுத்துகின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 4 முனைப் போட்டி என்று சொல்லப்பட்ட நிலையில், நாதக களத்தில் மட்டுமே இருந்தது ஆனால், ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வருகிறார். பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் அதற்கான சான்றிதழை பெற இன்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருக்கு வழிநெடுக மக்கள் வரவேற்பு அளித்தனர். சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோர் சந்திரசேகர் - ஷோபா வீட்டிற்கு சென்ற விஜய் , அவர்களிடம் ஆசி பெற்றார்.