தமிழக செய்திகள்

விஜய்-அஜித் ஒன்றாக... “சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா” என போஸ்டர் ஒட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

கார் பந்தய திடலுக்கு சென்ற விஜய், நடிகர் அஜித்குமாரை சந்தித்து பேசினார்.

கோவை:

தமிழக முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.

விஜய்-அஜித் சந்திப்பு

முன்னதாக கார் பந்தய திடலுக்கு சென்ற விஜய், நடிகர் அஜித்குமாரை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் உரையாடினர்.

விஜய்-அஜித் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

கோவையில் போஸ்டர்கள்

இந்த சந்திப்பை கொண்டாடும் வகையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விஜய் மற்றும் அஜித்குமார் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா” என்ற வாசகத்துடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அஜித் ரசிகர்கள்

இந்த சுவரொட்டிகளை அஜித்குமார் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். “கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர் நற்பணி மன்றம்” என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, உளுந்தூர்பேட்டை அருகே நேற்று அஜித்குமார் ரசிகர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள் விஜய்யும், அஜித்தும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT