தமிழக செய்திகள்

காவலர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்

காவலர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுமென விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர் மக்களே.. உங்கள் அனைவருக்கும் வனக்கம். வருகிற 16ந்தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட உள்ளோம். அதற்கு முன் உங்களிடம் சில முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறேன்.

நெசவாளர்கள்:

* நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்க அரசு சார்பில் இ காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.

* நிலையற்ற நுல் விலை, மின்சார நெருக்கடியை பகிர்ந்துகொள்ள, கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ30 ஆயிரம் வழங்கப்படும்.

* கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு ரூ.1,500 யூனிட்டாகவும் வழங்கப்படும்.

* நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

* அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்படும்.

* நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்.

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுவதற்கான காரண்ங்களின் ஒன்று மின் கட்டணம்.. இது ஜவுளித்துறையை பாதித்துள்ளது

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை தவெக நிறுத்தி வைக்கும்.

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.

விவசாயிகள்:

* 5 ஏக்கருக்கு குறைவான விவசாய ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* 5 ஏக்கருக்கு மேல் விவசாய ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

* நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ரூ4,500 ஆக உயர்த்தப்படும்

* விவசாயி குடும்பத்துக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் வழங்கப்படும்

* பயிர் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

அரசு உழியர்கள் நலன்

* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட குறித்து பரிசீலிக்கப்படும்.

* 5க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஆசியிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

* பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்

* காவலர்களுக்கான இடமாற்றம் வெளிப்படையாக நடைமுறைப்படும்

* காவலர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்

* காவலர்களுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.

* காவலர்களின் பணி நேரங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.

* காவலர்களுக்கான சலவைப்படி 1000 ரூபாயாக உயர்த்தப்படும்.

* காவலர் நல மருத்துவமனை நிறுவப்படும்

* பெண் காவலர்களுக்கென தனி ஓய்வறைகள், நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்

நீங்க எல்லோரும் விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். உங்க அண்ணணுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஒட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும். கான்பிடண்ட்டா இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”

இவ்வாறு அவர் கூறினார்.