சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறவிருப்பதால் கடந்த சில நாட்களாகவே தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அப்படி அவர் தூத்துக்குடி சென்ற போது ஏராளமான மக்கள் கூடி விட்டனர் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே இணையத்தில் வெளியானது.
இன்று காலை பிரசாரம் செய்வதற்காக விஜய் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் தொண்டர் கொடுத்த அஜித் உடன் இருக்கும் போட்டோவை ஆசையுடன் கேட்டு வாங்கினார் தவெக தலைவர் விஜய். அதேபோல் விஜய் கிரிக்கெட் வீரர் தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒருவர் பரிசளித்தார்.
அந்த இரண்டு போட்டோக்களையும் வாங்கிக் கொண்டு சில நிமிடங்கள் கையில் வைத்திருந்தார் விஜய். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவும், தவெகவும் மாறி மாறி நடிகர் அஜித் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர் அரசியலில் டிரெண்டாகி வருகிறது.