தமிழக செய்திகள்

மேட்டூர் அணையை திறந்துவைத்த 7-வது முதல்-அமைச்சர் விஜய்..!

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சென்னை,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. 120 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 3-ல் ஒரு பங்கு நெல் சாகுபடி டெல்டா மாவட்டங்களில்தான் நடக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

93 ஆண்டு பாரம்பரியம் கொண்ட மேட்டூர் அணை பாசனத்திற்கு வழக்கமாக ஜூன் 12-ம்தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால், சில நேரங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும் சமயத்தில் இது சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த ஆண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதால், குறுவை சாகுபடி பொய்த்து போனது. சம்பா சாகுபடிக்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இன்று (செப்டம்பர் 1) முதல் முறையாக மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார்.

மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 6 முதல்-அமைச்சர்கள் இங்கிருந்து தண்ணீர் திறந்து வைத்துள்ளனர். அந்த வகையில், தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக இருந்த காமராஜர் (1954-1963), கருணாநிதி (1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011), எம்.ஜி.ஆர் (1977-1987), ஜெயலலிதா (1991-1996, 2001-2006, 2011-2014, 2015-2016), எடப்பாடி பழனிசாமி (2016-2021) , மு.க. ஸ்டாலின் (2021-2026) ஆகிய 6 முதல்-அமைச்சர்கள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஏற்கனவே திறந்து வைத்துள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் 7-வதாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT