தமிழக செய்திகள்

விஜய் அதிருப்தி: சென்னையில் 16-ந்தேதி முக்கிய ஆலோசனை

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என 800 பேர் வரை பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் வருகிற 16-ந்தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை

10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இந்த கூட் டத்தில் விஜய் நிர்வாகிகளுக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார். இது தொடர்பாக காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.