தமிழக செய்திகள்

திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆதரவு பெற்றுள்ளார் விஜய்: டிடிவி தினகரன் சாடல்

ஆட்சியில் இருந்து கொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது என்று டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆதரவு பெற்றுள்ளார் விஜய். 108 தொகுதி தானே உங்களுக்கு மக்கள் கொடுத்துருக்காங்க. ஆட்சியில் இருந்து கொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது. ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்று உள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும். தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிவர்.

மாற்றம் வேண்டும் என்ற பெயரில் ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம் ஆனால், சட்டம் ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்கக்கூடாது. அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா?. தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.