தமிழக செய்திகள்

தவெக நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை

செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுகும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை, வாக்கு எண்ணிக்கை நாளன்று கட்சி முகவர்களின் பணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.