தமிழக செய்திகள்

விஜய் ஒரு கனவு உலகில் இருக்கிறார் - பியூஷ் கோயல்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை விமானநிலையத்தில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது’

”தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். வலிமையாக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் திமுகவை வீழ்த்தும். பெண்கள் விவசாயிகள், அனைவருக்குமான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். ஊழல் கட்சிகளான திமுகவும், காங்கிரசு ஒன்று சேர்ந்துள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் எதுவும் தெரியாமல் விஜய் இங்கே பேசுகிறார். விஜய் ஒரு கனவு உலகில் உள்ளார். அவர் குறிப்பிட்ட வாக்குகளே பெறுவார். அண்மையில் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு 2,3 தொகுதிகளே கிடைத்தன. அதே நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.