சென்னை,
தவெக எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களுக்கு விஜய்தான் பொறுப்பு என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரச்சாரத்தில் விஜய் சொன்னார்- " திருச்சி வேட்பாளர் விஜய் ! மதுரை கிழக்கு விஜய் ! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் ! " என்றாரல்லவா?
அப்போ அவர்தான் பொறுப்பு. அவருடைய எம்.எல்.ஏ.க்கள் மேல் பகீர் குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து வருகின்றன. அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு. ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் பேசுவதை கேட்பதற்கா மக்கள் விசிலுக்கு போட்டார்கள்? அவர்கள் என்ன விஜய்க்கு டப்பிங் வாய்ஸ் ஆ?
எந்த பிரச்சினைனாலும் முதல்-அமைச்சர் கண்டுக்கவே மாட்டாரு, அவரு பாட்டுக்கு கல்யாணம் கார் ரேஸுன்னு ஜோடியா சுத்துவாரு... ன்னு மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். கவனம் விஜய் சார் !
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.