தமிழக செய்திகள்

ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் - கனிமொழி எம்.பி.

திமுக இப்போது தீய சக்தி மட்டுமல்ல... மக்களை விட்டு ரொம்ப தள்ளிப் போன தூர சக்தி என முதல்-அமைச்சர் விஜய் கூறி இருந்தார்.

சென்னை,

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்-அமைச்சர் விஜய் பேசுகையில்,

தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் சேர்ந்துகிட்டு யாருக்கும் தெரியாமல் பேரம் பேசி ஆட்சி அமைக்க திட்டம் போட்டாங்க. திமுக இப்போது தீய சக்தி மட்டுமல்ல... மக்களை விட்டு ரொம்ப தள்ளிப் போன தூர சக்தி.. பார சக்தி.. ஓர சக்தி. இப்போதும் சொல்லிக்கிறேன். இப்பவும் இங்க ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே. ஒண்ணு திமுக இன்னொண்ணு தவெக. மற்றவங்களுக்கு இங்க வேலையில்ல. அதை மீறி யாராவது இடையில வந்தா ரிசல்ட் என்னனு தெரியும்.

அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா. நீங்கள் தற்குறி என்றவர்கள்தான் உங்களை கேள்விக்குறி ஆக்கிருக்காங்க.100 யூனிட் இலவச மின்சாரம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை, ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.நிதி தொடர்பான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டீர்கள். எல்லாத்தையும் நீங்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறீர்கள். என் மீது எத்தனை பழி போட்டாலும் மக்களுக்கானதை செய்து முடிப்பேன் என்றார்.

இந்தநிலையில், வாசுதேவநல்ல்லூர் திமுக எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்துவைத்து கனிமொழி எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆட்சிக்கு வந்த பிறகும் திமுவை குறை சொல்கிறார் விஜய்.சட்டம் ஒழுங்கு பற்றி விஜய்யிடம் கேளுங்கள். முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பதில் அளித்துள்ளார்.