கனிமொழி எம்.பி  
தமிழக செய்திகள்

காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் விஜய் ஒப்படைக்க வேண்டும்; கனிமொழி எம்.பி தாக்கு

முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது தவெக அரசு என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 7 கொலைகள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

மீண்டும் சொல்கிறேன்

நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது தவெக அரசு.

மீண்டும் சொல்கிறேன்… முதலமைச்சர் விஜய்; மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி எஸ்.பியின் நேற்றைய பேட்டி

தூத்துக்குடியில் நேற்று வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:- வீட்டில் தனியாக இருந்த சசிகலா மதியம் 2.30 மணி அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசார ணையில், சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீஷ் என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.முனீசை கைது செய்து, அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் செல்போன் பறி முதல் செய்யப்பட்டு உள்ளது.

8-வது கொலை

தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. கொலை நடந்த 3 மணி நேரத்தில் அதாவது மாலை 5.30 மணியளவில் குற்றவாளி கைது செய் யப்பட்டு உள்ளார்.மாவட்டத்தில் இது தொடர்ச்சியாக நடந்த 8-வது கொலை ஆகும். ஆனால், எந்த கொலையிலும் குற்றவாளிகளுக்கு, இதற்கு முன்பு எந்த வழக்கும் கிடையாது. சொந்த பகை காரணமாகவே நடந்து உள்ளது. தொடர் கொலைகளை தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

SCROLL FOR NEXT