தாராபுரம்
விஜய் பாணியில் செய்கைகள் செய்து தாராபுரத்தில் வாக்காளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் வாக்கு சேகரித்தார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாராபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் அருண்ராஜ், முதல்-அமைச்சர் விஜய் பிரசாரத்தின்போது மேற்கொள்ளும் சில செய்கைகளைப் போலவே செய்து வாக்காளர்களை கவரும் வகையில் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களிடம் நெருக்கமாக சென்று பேசுவதுடன், முதல்-அமைச்சர் விஜய் பாணியில் செய்கைகளை செய்து அமைச்சர் அருண்ராஜ் பிரசாரம் மேற்கொண்டது அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.