தமிழக செய்திகள்

சென்னையில், விஜய் இன்று 3 இடங்களில் பிரசாரம்

தியாகராயநகர், சேப்பாக்கம், எழும்பூர் தொகுதிகளில் ‘விசில்’ சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அவர், சென்னை தியாகராயநகரில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் மாலையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து 'விசில்' சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.