தமிழக செய்திகள்

விஜய் சீக்கிரமே முதல்-அமைச்சராக பதவியேற்பார் - ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது முறையாக ரங்கசாமி முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.

இதையடுத்து தனது முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதல் - மந்திரி பதவியை ராஜினாமா செய்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர, கடிதம் கொடுப்பேன்" என்றார்.

அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, "விஜய்க்கு வாழ்த்து.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார். ஆட்சி அமையும்" என்றார்.