தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், "பத்ம பூஷன்" அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, சென்னை, தே.மு.தி.க. அலுவலகத்தில் உள்ள "கேப்டன் ஆலயம்" நினைவிடத்தில் நடைபெற்ற 2-ம் ஆண்டு குருபூஜை நிகழ்வில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர்
பிரேமலதா அவர்களோடு இணைந்து பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினேன். கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.