தமிழக செய்திகள்

விஜயகாந்த் பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

விஜயகாந்த் பிறந்தநாள்

தமிழ்த் திரைத்துறை ஆளுமையும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மறைந்த அன்புச் சகோதரர் “பத்ம பூஷன்” விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளான இன்று,

அவர்தம் கலைத்துறைச் சாதனைகளையும் பொதுவாழ்வில் அவர் தமிழக மக்கள் மீது காட்டிய பேரன்பையும் நினைவுகூர்கிறேன்.

மண்ணை விட்டு மறைந்தாலும், ‘கேப்டன்’ என்ற பெயரும், உங்கள் புகழும் காலம் கடந்து நிலைத்திருக்கும்..!!!”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.