எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டலம் சார்பாக தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி, உத்தங்குடி பகுதியில் நடந்தது. மண்டல செயலாளர் முஜிபூர் ரகு மான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி கலந்து கொண்டு பேசினார். தேசிய பொதுச்செய லாளர் மஜித் பைஜி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய பொரு ளாளர் அப்துல்சத்தார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, எம்.கே. பைஜி நிரு பர்களிடம் கூறுகையில், பா.ஜனதா கட்சி மக்களின் முன்பாக மிகப்பெரிய தோல்வி கண்ட அரசாக தற்போது இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு உள்பட அனைத்து துறைகளிலும் தோல்வியை கண்டுள்ளது. இந்து சமுதாய மக்களே பா.ஜனதாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.
டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது இந்த ஆட்சியின் முதல் விக்கெட். 2029-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் அனைத்து விக்கெட்டும் விழும். முதல்-அமைச்சர் விஜய்யின் திரைப்படத்தை கேரளாவில் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். ஆனால், அவரது அரசியல் அங்கு எடுபடாது. கேரள மக்கள் சினிமாவையும், அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்” என்றார்.
கூட்டத்தில், காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும், தென் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் முறியடிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கான தனி பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்பட 7 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன