தமிழக செய்திகள்

விவாகரத்து கோரி விஜய் மனைவி சங்கீதா கோர்ட்டில் மனு - ஏப்ரல் 20-ந்தேதி விசாரணை

வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சங்கீதாவின் மனுவை ஏற்ற செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்பல நல கோர்ட்டுக்கு மாற்றியது.

பிப்ரவரி 24-ந்தேதி தாக்கல் செய்த இந்த மனு, வருகின்ற ஏப்ரல் 20-ந்தேதி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த் சங்கீதா விஜய்யை காதலித்து மணந்து கொண்டார். அவரது தந்தை லண்டன் தொழிலதிபர் ஆவார். விஜய்-சங்கீதா நிச்சயதார்த்தம் லண்டனில் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.