விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு. ராதாமணி.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் திமுக எம்.எல்.ஏ, கே. ராதாமணி காலமானார்.