தமிழக செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூர் கீழ சேத்தி கிராமத்தில் மோட்டார் பழுதானதால் கடந்த 2 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநீலக்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT