தமிழக செய்திகள்

தவெகவின் கைக்கூலி சி.வி.சண்முகம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி தாக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகள் தோல்விக்கு காரணம் சி.வி.சண்முகம். தவெக தூண்டுதலின் பேரில் அதிமுக கட்சியை உடைக்க நினைக்கிறார்

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;

தமிழக வெற்றி கழகம் கட்சி தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவிட்டு தற்போது விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளனர். அதாவதுரூ. 15 ஆயிரத்து 600 கோடி தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில் வெறும் ரூ. 2044 கோடி மட்டுமே விவசாய கடன்தள்ளுபடி செய்துள்ளனர் அதனால் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசை கண்டித்து எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கேட்டதும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி பற்றி தவறான செய்திகளை கூறி வருகின்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது பாமக போட்ட பிச்சை என்று கூறி அதிமுக தொண்டர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி இருந்த போதும் விழுப்புரம் தொகுதியில் தோல்வியை பெற்றுள்ளோம் கூட்டணி கட்சி பலத்தால் வெற்றி பெறுவது சகஜம் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப அரசியல் செய்யவில்லை விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தனது அண்ணனை வைத்து குடும்ப அரசியல் செய்தார் சண்முகத்தை மீறி யாராவது எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தால் அவரது கட்சி பதவியை பறித்து விடுவார்

விழுப்புரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகள் தோல்விக்கு காரணம் சி.வி.சண்முகம். தவெக தூண்டுதலின் பேரில் அதிமுக கட்சியை உடைக்க நினைக்கிறார் சி.வி.சண்முகம் தவெகவில் அமைச்சர் பதவி ஆசை வார்த்தை கூறி 25 எம்எல்ஏக்களை அழைத்துச் சென்றார் அது நடைபெறாமல் போகவே தற்போது எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக பேசி வருகிறார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக வெற்றி கழகத்திற்கு சண்முகம் தான் அனுப்பி வைக்கின்றார் மயிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட்டால் சண்முகம் டெபாசிட் கூட வாங்க மாட்டார் அவரை கட்சியை விட்டு நீக்கினால் எம்எல்ஏ பதவி தப்பும் எனவும் அதன் பின்னர் தமிழக வெற்றி கழகத்தில் இனைந்து விடலாம் என நினைக்கின்றார் இத்துடன் எடப்பாடி பழனிச்சாமி பற்றி அவதூறாக பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.