தமிழக செய்திகள்

விழுப்புரம்: கார் விபத்தில் மாமியார், மருமகள் பலி

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர்கள் சென்ற கார், விக்கிரவாண்டி பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த மாமியார், மருமகள் பலியாகினர்.

சென்னை மயிலாப்பூர் லலிதா நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 63). இவர், தனது மனைவி விசாலாட்சி(59), தாய் லட்சுமி(91), உறவினர் பத்மநாபன் மனைவி நாகலட்சுமி(59) ஆகியோருடன் ஒரு காரில் திருச்சி நோக்கி புறப்பட்டார். காரை விஸ்வநாதன் ஓட்டினார்.

தடுப்புக்கட்டையில் கார் மோதி விபத்து

அந்த கார் நேற்று காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. மேலக்கொந்தை கூட்டுரோடு அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விசாலாட்சி, லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார். விஸ்வநாதன், நாகலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.