தமிழக செய்திகள்

விழுப்புரம்: டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; போலீசார் விசாரணை

வேலைக்கு சென்று வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்

விழுப்புரத்தில் வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தில் வசித்து வந்த ஞானபிரகாசம் என்பவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த டிராக்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

இதில், அந்த டிராக்டர் வாய்க்காலில் கவிழ்ந்தது. டிராக்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்து விட்டார். இந்த விபத்து பற்றி அறிந்து, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT