விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 71), தி.மு.க. மாநில தலைமை பொதுக் குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவின்போது த.வெ.க. உறுப்பினர்களுக்கும். பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாலகிருஷ்ணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க. தொண்டரான பவனேஷ் திடீரென பாலகிருஷ்ணனை கத்தியால் கன்னத்தில் குத்தியுள்ளார். இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் பவனேஷை கைது செய்தனர்.