தமிழக செய்திகள்

விழுப்புரம்: செங்கல்லால் அடித்து தொழிலாளி கொலை- 2 பேர் கைது

கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளி மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக செல்பவர்களை திட்டிக்கொண்டிருந்தார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 41), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

சம்பவத்தன்று மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக செல்பவர்களை திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 13 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவன் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வனும்(24) தட்டிக்கேட்டனர்.

இதில் இருவருக்கும் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் செங்கல்லால் அய்யனாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் இறந்தார். இதையடுத்து வாலிபரையும், மாணவனையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT