தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: பெங்களூரு-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம்,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு நெல்லை இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கே.எஸ்.ஆர். பெங்களூரு நெல்லை சிறப்பு ரெயில் (06527) இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.35 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக நாளை (சனிக்கிழமை) காலை 4.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் 4.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதியம் 1.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் நெல்லை - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06528), நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.45 மணிக்கு நெல்லையில் இருந்து இருந்து புறப்படும். இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக இரவு 9.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், இரவு 9.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன் மென்ட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT