தமிழக செய்திகள்

புழல் சிறைக்குள் வன்முறை: பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது சக கைதிகள் கொலை முயற்சி

கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்,

சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மத்திய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது, சிறைக்குள் இருந்த சக கைதிகள் திடீரென கொலை முயற்சி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புழல் மத்திய சிறை

புழல் மத்திய சிறையில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில் கும்பகோணத்தை சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனும் அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. போலீசாருக்கு தகவல் கிடைத்தநிலையில், ரவுடியை கொல்ல திட்டமிட்ட 4 பேரை பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி வெள்ளைக்காளியை கொல்ல திட்டம் தீட்டிய ரவுடி லாலி மணிகண்டன் சேலம் சிறைக்கும், மற்ற 3 பேர் கடலூர் சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.