தமிழக செய்திகள்

கோவில்களில் விஐபி தரிசனம்: அறநிலையத் துறை வழிகாட்டுதல் வெளியீடு

விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவில்களில் விஐபி தரிசனத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை,

* பக்தர்கள் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படாதபடி கோவிலில் விஐபிக்களின் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும்

* கோவில்களுக்கு முக்கியப் பிரமுகர்கள் வருகை குறித்து ஒருநாள் முன்னதாகவே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்

* முக்கியப் பிரமுகர்களை கோவில் வளாகத்தினுள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி தரக்கூடாது

* விஐபிக்கள் வருகையின்போது கோவிலின் புனிதத்தன்மை, மரபுசார்ந்த விஷயங்கள் பாதிக்கக்கூடாது

* விஐபிக்களின் வருகை குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து கோவில்களிலும் பின்பற்ற அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.