விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் தனியார் மதுபானக்கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று அங்கு சில மர்ம நபர்கள் வந்தனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் மதுபானக்கடையை நோக்கி வீசினர்.
இதில் கடையின் வெளி சுவர் மற்றும் கடையின் உள்சுவற்றில் 3 நாட்டு வெடிகுண்டுகள் விழுந்து வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் கடையில் வேலை பார்க்கும் மாயன் (வயது 34) என்பவர் காயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.