கைது செய்யப்பட்ட சின்ன அண்ணன் 
தமிழக செய்திகள்

விருதுநகர்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது

பாலியல் தொந்தரவு கொடுத்த சின்ன அண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர், திருச்சுழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்ன அண்ணன் (வயது 69) என்ற முதியவர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

முதியவர் கைது

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக திருச்சுழி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் சின்ன அண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.