தமிழக செய்திகள்

விருதுநகர்: தனியாக வசித்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகைகள் கொள்ளை

விருதுநகர் அல்லம்பட்டியில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர்,

விருதுநகர் அல்லம்பட்டியில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டியை கொன்று 10 சவரன் நகைகள் கொள்ளை

விருதுநகர் அல்லம்பட்டியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஜோதிராணி (வயது 65) என்பவரை மர்ம நபர்கள் கழுத்தை துணியால் இறுக்கி படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சரவன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனியாக வசிக்கும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT