தமிழக செய்திகள்

விருதுநகர்: வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT