தமிழக செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 19-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வீரபெருமாள் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒரே கோரிக்கைக்காக பல மனுக்கள் தாக்கல் செய்வது தேவையற்றது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த மனுவை பட்டாசு ஆலை விபத்து தொடர்பான வழக்கோடு சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர்.