தமிழக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் - அறிவிப்பு வெளியீடு

இணையதளம் மற்றும் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4 -ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்த வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, தேர்தல் ஆணையத்தின் results.eci.gov.in என்ற இணையதளத்திலும் `ECINET’ என்ற போன் செயலியிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.