கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

நான் கல்லூரியில் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகம் எனக்கும் நிறைய உள்ளது. நான் நிரந்தர மாணவனாகவே என்னை நியமித்து கொண்டுவிட்டேன். அதனால் இங்கு வருவதற்கு எனக்கு நிறைய உரிமை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இது கலாசார நிகழ்ச்சி. தேர்தல் நிகழ்ச்சி அல்ல. ஆனால் அரசியல் எல்லா இடங்களிலும் புகுந்து தாக்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதைப்பற்றி பேசவில்லை என்றாலும், அந்த குறியீட்டையாவது அவர்களுக்கு காட்ட வேண்டும். புரிய வைக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.

தனியாக கட்சியை தொடங்கி ஒரு சதவீத வாக்கையாவது வாங்க முடியுமா என்று விஜய் சவால் விடுத்தது தொடர்பான கேள்விக்கான பதிலை வேறு இடத்தில் வைத்து சொல்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கு அரசியல் புரிதல் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்காமல், இல்லையென்று நினைத்து கொண்டு சொல்வது நல்லது. ஓட்டுரிமை குறித்து அவர்களிடம் நியாபப்படுத்த வேண்டும். அந்த உரிமை அவர்களுக்கு வந்து விட்டது.

Also read:கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயம்

எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதை சொல்வது என்னுடைய கடமை. அதை எந்த அரசாலும் தடுக்க முடியாது என்கிற நம்பிக்கை எனக்கு இருப்பதால் தைரியமாக நான் இங்கு வந்திருக்கிறேன். விஜய்யை ஒரு நடிகையுடன் ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்திருப்பது அவர்களின் அரசியல். அது என்னுடைய அரசியல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.